+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+78%E0%AE%86%E0%AE%95+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81
Thursday, 21 February 2019 - 19:14
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78ஆக உயர்வு
296

Views
பங்களாதேஸின் 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நகரான சௌக்பசாரில் உள்ள கட்டிடங்களில் பரவியத் தீப்பரவல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78ஆக அதிகரித்துள்ளது. 
 
பங்களாதேஸ் தலைநகர் டாக்காவில் புரிகங்கா நதிக்கரையில் இந்த நகரம் அமைந்துள்ளது.
 
400 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவை ஆண்ட முகலாயர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த நகரம், 3 தசாப்தங்களுக்கு முன்னர் புகழ்பெற்ற நகரமாக விளங்கியது.
 
எனினும் டாக்காவின் அதீத வளர்ச்சியால் இந்த நகரின் முக்கியத்துவம் குறைவடைந்த போதும், புகழ்மங்காமல் இருந்தது.
 
இந்த நகரில் வாசணைத் திரவியங்கள் மற்றும் பளாஸ்டிக் உற்பத்திகளுக்கான பல முக்கிய கைத்தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.
 
இந்தநிலையில் தடைசெய்யப்பட்ட பல ஆபத்தான இரசாயனப் பொருட்களும் அங்குள்ள கட்டிடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 
 
இதன்விளைவாகவே அங்கு அடிக்கடி தீப்பரவல் ஏற்படுவதாகவும் பங்களாதேஸின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
கடந்த 2013ம் ஆண்டு இந்த நகரில் ஏற்பட்ட பாரிய தீப்பரவல் காரணமாக, 120 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,456 Views
46,692 Views
2,312 Views
55,887 Views
1,194 Views
105,605 Views
Top