%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%21
Friday, 15 March 2019 - 19:37
சிறிகொத்தவில் தீமூட்டிக்கொண்ட நபர் தொடர்பில் வௌிவந்த தகவல்!
485

Views
புறக்கோட்டையில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவுக்கு அருகில் உள்ள தேசிய சேவையாளர் சங்க அலுவலகத்திற்கு முன்னால், தனக்கு தானே தீமூட்டிக்கொண்டவர், களுபோவில போதனா மருத்துவமனையில் தற்போது சிகிச்சைப்பெற்று வருகின்றார்.

இலங்கை போக்குவரத்து சபையின் கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தின் அலுவலக அதிகாரியாக சேவையாற்றியுள்ள அவர், தொடாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த நிமல் பெரேரா என அடையாளம் காணப்பட்டுள்ளர்ர்.

அவர் உட்பட மேலும் சிலர் தேசிய சேவையாளர் சங்க அலுவலகத்திற்கு முன்னால் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட திட்டமிட்டிருந்த நிலையில், தமக்குத் தாமே தீமூட்டிக்கொண்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அவர் உள்ளிட்ட தரப்பினர், ஓய்வுபெற்றமையினால் ஏற்பட்ட பிரச்சினையை தீர்ப்பதற்காக இந்த எதிர்ப்பு நடவடிக்கை திட்டமிடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,427 Views
46,575 Views
2,077 Views
55,704 Views
1,160 Views
105,445 Views
Top