+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
Friday, 15 March 2019 - 19:53
வெடிபொருட்களைக் கொண்டுசென்ற ஒருவர் கைது
618

Views
ஹம்பாந்தோட்டை - பஹல அந்தருவெவ பகுதியில் வெடிபொருட்களைக் கொண்டுசென்ற ஒருவர் காவல்துறை விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்ய்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் உள்ள வீதி ஒன்றில் பயனித்த கெப் ரக வாகனம் ஒன்றை தடுத்தி நிறுத்தி சோதனை நடதத முயற்சித்தபோது, அந்த கெப் ரக வாகனம் சமிக்ஞையை கருத்திற்கொள்ளாமல் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், குறித்த வாகனத்தை பின்தொடர்ந்த காவல்துறை விசேட அதிரடிப்படையினர், அதனைத் தடுத்து நிறுத்தி, சாரதியை கைதுசெய்துள்ளனர்.

இதையடுத்து, அந்த கெப் ரக வாகனத்தை சோதனையிட்டபோது அதிலிருந்து, சில வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

25 கிலோ நிறைகொண்ட அமோனியா நைட்ரேட் ரக வெடிபொருட்கள் அடங்கிய 9 பொதிகளும், 100 மின்சார டெட்டனேட்டர்களும், 196 ஜெலக்நைட் ரக வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கல் உடைக்கும் இடமொன்றுக்கு இந்த வெடிபொருட்கள் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,427 Views
46,575 Views
2,077 Views
55,704 Views
1,160 Views
105,445 Views
Top