கென்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்த இணக்கம்

Friday, 15 March 2019 - 19:46

%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
கென்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை புதிய துறைகளின் ஊடாக பலப்படுத்துவதற்கு இரண்டு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

கென்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், கென்ய ஜனாதிபதி உஹுரு கென்யாட்டாவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பின்போது இரண்டு நாடுகளின் தலைவர்களும் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஒரே வகையான சவால்களுக்கு முகங்கொடுத்துள்ள நாடுகளான கென்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்துவதற்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளதாகவும், இரு நாடுகளினதும் மக்களுக்கு விரிவான நன்மைகள் கிடைக்கும் வகையில் அந்த உறவுகளை பலப்படுத்துவதிலும் தலைவர்கள் கவனம் செலுத்தினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips