%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+49+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%21+-+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%21
Friday, 15 March 2019 - 20:13
இன்று 49 பேரை சுட்டுக் கொலை செய்த கொடூரன்! - அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட நியூசிலாந்து தேசிய கொடி!
583

Views
நியூசிலாந்து, கிறிஸ்ட்சர்ச்சில் இரண்டு பள்ளிவாசல்களில் தீவிரவாதி ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.

இது தவிர, 20 பேருக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவ மனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்ட துப்பாக்கிதாரி அவுஸ்திரேலிய பிரஜாவுரிமையை கொண்டவர் என தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன், அவர் தீவிரவாத வலதுசாரி என இனம்காணப்பட்டுள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், கொலை குற்றவாளி என்ற குற்றச்சாட்டின் கீழ், துப்பாக்கிதாரி நாளை காலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக நியூசிலாந்தின் காவல்துறை ஆணையாளர் மைக் புஷ் தெரிவித்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்து பெண் ஒருவர் உட்பட கைது செய்யப்பட்ட மூவரில், ஒருவருக்கு இந்த சம்பவத்துடன் எந்த விதமான தொடர்பும் இல்லை என்பது விசாரணை மூலம் தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஏனையவர் இருவரும் புலனாய்வு அதிகாரிகளினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக காவல்துறை ஆணையாளர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், அல்-நூர் பள்ளிவாசலில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை துப்பாக்கிதாரியின் தலைகவசத்தில் பொருத்தப்பட்டிருந்த கெமரா மூலம் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட காட்சி பதிவு செய்யப்பட்டு 'பேஸ்புக்' சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

இந்த காட்சிகளை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என காவல்துறையினர் வேண்டுகொள் விடுத்துள்ளனர்.

'பேஸ்புக்' நிறுவனம், துப்பாக்கிதாரியின் 'பேஸ்புக்' மற்றும் இன்ஸ்ரகிராம் கணக்குகள் முற்றாக அகற்றப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இது தவிர, ஏனைய கணக்குகளில் உள்ள துப்பாக்கி தொடர்பான பிரதிகளையும் அகற்றி வருவதாக தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக நியூசிலாந்து பிரதமர் ஜசிண்டா ஆடேன் தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளதுடன், இந்த தினங்கள் நியூசிலாந்திற்கு துன்பியலான நாட்கள் என குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் , இன்றைய தினம் நியூசிலாந்து நாடாளுமன்றில் அந்நாட்டு தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,427 Views
46,575 Views
2,077 Views
55,704 Views
1,160 Views
105,445 Views
Top