+%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F++%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%A3
Saturday, 16 March 2019 - 7:38
அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட சமன் ரோஹண
222

Views
காலி - ரத்கமயில் இரண்டு வர்த்தகர்கள் கடத்தப்பட்டு, கொலைசெய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்துக்குரியவரான தென் மாகாண விசேட குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரியான காவல்துறை பரிசோதகர் சமன் ரோஹண, அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
 
காலி பிரதான நீதவான் ஹர்ஷண கெக்குணவெலவின் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
சந்தேகத்துக்குரியவர், மாத்தரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
 
இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்துக்குரியவர்களுக்கு இடையே குறித்த சிறைச்சாலைக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ளமையினால், அவரை தடுத்து வைத்திருக்கும் இடத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு அவரின் சட்டத்தரணி நீதிமன்றில் மனு ஒன்றின்மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இரண்டு வர்த்தகர்கள் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தென் மாகாண விசேட குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி உட்பட 5 காவல்துறை அதிகாரிகள் மற்றும் வன பாதுகாப்பு அதிகாரி உட்பட 7பேர் இதுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,427 Views
46,575 Views
2,077 Views
55,704 Views
1,160 Views
105,445 Views
Top