%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3++%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81
Saturday, 16 March 2019 - 12:14
ஜெனிவாவுக்கு பயணமாகவுள்ள குழு
14

Views
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துக் கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபனவின் தலைமையில் 5 பேர் கொண்ட குழு ஜெனிவாவுக்கு பயணமாகவுள்ளது.
 
இந்தக் குழுவில் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், நாடாளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம, வெளிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, பிரதி மன்றாடியார் நாயம் ஏ.நெரீன்புள்ளே ஆகியோர் அடங்குகின்றனர்.

இந்த நிலையில், ஜெனிவா கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ள இந்தக் குழு நாளைய தினம் கொழும்பில் கூடி, கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இலங்கை குழுவினர் ஜெனிவாவுக்கு புறப்பட உள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் தொடர்பில், இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரனையுடன் தீர்மானம் 30/1 ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டு இந்த ஆண்டுடன் நான்கு வருடங்கள் கடந்துள்ளன.
 
குறித்த தீர்மானத்தில் இலங்கை அரசாங்கம் இணங்கிய 36 பொறுப்புக்கூறல் கடப்பாடுகளில் 6 ஐ நிறைவேற்றியுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், இலங்கையில் மறுசீரமைப்பு, பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் என்பவற்றை விரிவாக்கல் என்ற தலைப்பில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை ஜெனிவாவில் முன்வைக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா, ஜேர்மனி, கனடா, மொன்டிநேக்ரோ மற்றும் வடக்கு மெசடோனியா ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்த இந்த பிரேரணையை பிரித்தானிய முன்வைத்துள்ளது.

இதேநேரம், மனித உரிமைகள் பேரவையின் பூரண அதிகார அலுவலகம் ஒன்றை இலங்கையில் நிறுவுவதற்கு அனுமதியளிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பெச்செலட், இலங்கை தொடர்பான தமது அறிக்கையில் கோரியுள்ளார்.
 
அத்துடன், மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் இலங்கையை மிகவும் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும் என்றும், மனித உரிமைகள் பேரவையின் பூரண அதிகார அலுவலகம் ஒன்றை இலங்கையில் திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும உயர்ஸதானிகர் வலியுறுத்தியுள்ளார்.
 
இந்த நிலையில்,இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் காலஅவகாசம் வழங்கக்கூடாது என்றும், இலங்கை விவகாரத்தை பாதுகாப்பு சபையிடம் பாரப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இன்றைய தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் யாழ்ப்பாணத்தில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
 
 
 
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,427 Views
46,575 Views
2,077 Views
55,704 Views
1,160 Views
105,445 Views
Top