Hirunews Logo
%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D..
Sunday, 17 March 2019 - 15:25
இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்..
590

Views
மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்றும் நாளையும் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வடமேல் மாகாணத்தின் சில பகுதிகளில் 75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மழை பெய்கின்ற வேளை இடி, மின்னல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ள காரணத்தினால், அதன் தாக்கங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
11,004 Views
30,415 Views
12 Views
19,343 Views
59 Views
66,382 Views
Top