Hirunews Logo
%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88
Sunday, 17 March 2019 - 20:00
உணவகங்களுக்கு விரைவில் வரவுள்ள புதிய முறைமை
370

Views
ஒவ்வொரு வருடமும் உணவகங்களை பதிவு செய்யும் புதிய முறைமையொன்றை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சிற்றுண்டிகளிலும் நிற சமிக்ஞையை அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ம் திகதி முதல், இந்த திட்டம் அமுலுக்கு வரவுள்ளது.

பிஸ்கட் உள்ளிட்ட அனைத்து வகையான சிற்றுண்டிகளிலும் உள்ளடக்கப்பட்டுள்ள சீனி, உப்பு மற்றும் கொழுப்பின் அளவு தெளிவாக சுட்டிக்காட்டப்படும் வகையில் இந்த நிற சமிக்ஞை அமுலாக்கப்படுவது அந்த தினத்தில் இருந்து கட்டாயப்படுத்தப்படும்.

இதற்கு முன்னர் குடிபானங்களில் சீனி உள்ளடக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சு நிற சமிக்ஞை திட்டத்தை அமுலாக்கி இருந்தது.

இதன்படி சீனி அதிகம் உள்ள பானங்கள் சிவப்பு நிறத்திலும், மத்திய அளவில் சீனி உள்ள பானங்கள் மஞ்சல் நிறத்திலும், குறைந்த சீனியைக்கொண்ட பானங்கள் பச்சை நிறத்திலும் குறிப்பிடப்படுகின்றன.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
11,015 Views
30,512 Views
151 Views
19,472 Views
72 Views
66,509 Views
Top