Hirunews Logo
%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+-+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D
Sunday, 17 March 2019 - 20:21
அரசாங்கத்தைப் பாதுகாக்கவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - சுரேஸ் பிரேமச்சந்திரன் சாடல்
17

Views
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டுமென்பதிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உறுதியாக இருப்பதாக, ஈபிஆர்எல்எப் அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான அழுத்தத்தைக் கூட கொடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தயாராக இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அரசியல் ரீதியாக தமிழ் மக்களுக்கு அவர்கள் எதனையும் செய்வதாக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகள் தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது போதிலும், நாடாளுமன்றத்தில் இருக்கிறவர்கள் அதில் அந்த அளவு பங்களிப்பு செய்தார்கள் என்பது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த விடயங்களினால், மக்கள் பிரதிநிதிகள் மீது இருந்த நம்பிக்கைகள் தற்போது, மக்களுக்கே இல்லாது போயிருக்கின்றதாக சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
10,996 Views
30,345 Views
534 Views
19,263 Views
51 Views
66,289 Views
Top