%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%87%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
Monday, 18 March 2019 - 12:59
நியுசிலாந்தில் துப்பாக்கிச் சட்டத்தை சீரமைக்க அமைச்சரவை இணக்கம்
409

Views
கிறிஸ்ட்சேர்த் பள்ளிவாசல் மீதான தாக்குதலை அடுத்து நியுசிலாந்தில் துப்பாக்கிச் சட்டத்தை மாற்றி அமைப்பதற்கு அந்த நாட்டின் அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.

அந்த நாட்டின் பிரதமர் ஜெனிந்தா ஆர்டன் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

தாக்குதல் தொடர்பில் ப்ரென்டன் டரென்ட் என்ற 28 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த தீவிரவாத தாக்குதல் சம்பத்தை அடுத்து, நியுசிலாந்தில் துப்பாக்கி சட்டத்திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்று விவாதம் எழுந்துள்ளது.

இந்தநிலையில் எதிர்வரும் 25ம் திகதி பிரதமர் ஆர்டன், துப்பாக்கி சட்டத்திருத்த யோசனையை அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் நடத்திய தீவிரவாதி கடந்த 2017ம் ஆண்டு துப்பாக்கிக்கான அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொண்டிருப்பதாகவும், அவர் இணையம் மூலம் துப்பாக்கியை கொள்வனவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,858 Views
47,267 Views
3,824 Views
57,109 Views
8 Views
106,861 Views
Top