பொருளாதார தடைக்கு எதிராக சட்டநடவடிக்கை

Monday, 18 March 2019 - 19:49

%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.

நேரடியாக ஈரானிய வானொலி மற்றும் தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பு செய்யப்பட்ட உரையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தாம் வெளிவிவகார மற்றும் நீதி அமைச்சுக்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த மே மாதம் ஈரானுடனான 2015ஆம் ஆண்டு அணு ஆயுத ஒப்பந்தத்தை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைவிட்ட நிலையில், ஈரானுக்கு எதிராக மீள பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன.

இப்படியான பொருளாதார தடைகளை விதிப்பதன் மூலம் அமெரிக்கா தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்தி, தனக்கு சாதகமாக செயல்படும் பொம்மை அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க முனைவதாக அவர் தமது உரையில் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் ஈரானினால் தாக்கல் செய்யப்பட்ட பிறிதொரு வழக்கில், மனிதாபிமான மற்றும் பொதுமக்களின் வான் பயண பாதுகாப்புக்களை பாதிக்காத வாறு அமெரிக்காவினால் விதிக்கப்படும் பொருளாதார தடை உறுதி செய்யப்பட வேண்டும் என தீர்ப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ மற்றும் ஏனைய அமெரிக்க அதிகாரிகள் 'உளவியல் யுத்தம்' ஒன்றை மேற்கொண்டு நாணய சந்தையில் பீதியை ஏற்படுத்த முனைவதாக, ஈரானிய மத்திய வங்கியின் ஆளுநர் அப்டொல்நாசர் ஹெம்மற்றி குற்றஞ்சாட்டியுள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips