Hirunews Logo
%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21
Monday, 18 March 2019 - 19:56
மொசாம்பிக் சூறாவளியில் நூற்றுக்கும் அதிகமானோர் பலி!
142

Views
சூறாவளி தாக்குதலுக்கு உள்ளான மொசாம்பிக் துறைமுக நகரான பீயிரா (Beira) பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட சூறாவளி தாக்குதலுக்கு உள்ளான பிரதேசங்களுக்கு மீட்பு பணியாளர் குழு நேற்றே சென்றடைய முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 106 மைல் வேகத்தில் வீசிய காற்று பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மரங்களிலும், வீட்டு கூரைகளிலும் இருந்த மக்களை மீட்பு பணியாளர்கள் காப்பாற்றியுள்ளனர்.

நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ள நிலையில், மரணித்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என மீட்பு பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை, கிழக்கு சிம்பாப்வேயில் 60 இற்கும் மேற்பட்டவர்கள் மரணமாகியுள்ளனர்.

இரண்டு பாடசாலைகளின் விடுதிகள் முற்றாக பாரிய வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதவிர, மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள பாறைகள் பல குடியிருப்புக்களை நேரடியாக தாக்கியுள்ளன.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
11,821 Views
32,804 Views
3,544 Views
23,395 Views
26 Views
71,009 Views
Top