​பொள்ளாச்சி பாலியல் வழக்கு..!! விசாரணைகளில் வௌியாகியுள்ள திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள்...!

Tuesday, 19 March 2019 - 10:19

%E2%80%8B%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81..%21%21+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...%21
பொள்ளாச்சி பாலியல் வழக்குடன் தொடர்புடைய திருநாவுக்கரசு வெளிமாநிலத்திற்கு தப்பி செல்ல உதவிய காவல்துறை அதிகாரிகள் யார் யார் என்பது தொடர்பில் மூன்றாவது நாளாக நடைபெற்ற விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பல ஆண்டுகளாக நடந்து வந்த பாலியல் வன்முறை குறித்து 19 வயது கல்லூரி மாணவி வழங்கிய முறைப்பாடு தொடர்பாக 27 வயதுடைய திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்களான 25 வயதுடைய சபரிராஜன் 29 வயதுடைய சதீஷ் 24 வயதுடைய வசந்த குமார் ஆகிய நால்வரை காவல் துறையினர் கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர்.

தற்போது இந்த வழக்கினை இந்தியாவின் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இதில் திருநாவுக்கரசை சிபிசிஐடி காவல் துறையினர் நான்கு நாட்கள் தடுப்பு காவலில் வைத்து உப்பிலிபாளையத்திலுள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவரிடம் நடைபெற்ற விசாரணைகளில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்த திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்கள் தங்கள் வலையில் விழுந்த பெண்களை சீரழித்து ஆபாச காணொளிகளாக பதிவு செய்த விவகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்தது.

அதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

ஆனால் அரசியல் பிரமுகர்களின் உதவியால் விசாரணை வளையத்திற்குள் சிக்காமல் குறித்த குழு தப்பியது.

இதற்காக பல இலட்சம் ரூபாய் காவல்துறையினருக்கு கைமாறியதாகவும் அப்போதே காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் குறித்த விவகாரம் இந்த அளவிற்கு பூதாகரமாகியிருக்காது என்றும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான் கடந்த மாதம் இந்த குழுவினால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி தைரியமாக காவல் துறையில் முறைப்பாடு செய்ததும் திருநாவுக்கரசின் நண்பர்கள் மூவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ஆனால் குறித்த சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரான திருநாவுக்கரசு தலைமறைவானார்.

அவரை வெளிமாநிலத்திற்கு தப்பிச்செல்லுமாறு காவல் துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கியமை விசாரணைகளின் வாயிலாக தெரியவந்துள்ளது.

ஆனால் பாலியல் பலாத்கார பிரச்சினை பரபரப்பானதும் திருநாவுக்கரசு மாக்கினாம்பட்டி பகுதிக்கு திரும்பினார்.

இந்நிலையில் அவரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருநாவுக்கரசை வெளிமாநிலத்திற்கு தப்பிச்செல்ல ஆலோசனை வழங்கிய அதிகாரிகள் யார் என்பன போன்ற விபரங்கள் தற்போது திருநாவுக்கரசிடம் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளதால் சம்பந்தப்பட்ட காவல் துறை உத்தியோகத்திரிடம் விசாரணைகளை மேற்கொள்ள சிபிசிஐடி காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டுள்ள நால்வருடன் தொடர்பிலிருந்த முகநூல் நண்பர்களின் பட்டியலை காவல் துறையினர் திரட்டியுள்ளதோடு அவர்களிடம் விசாரணைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.

இதற்காக சைபர் குற்றவிசாரணை காவல் துறையினர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட வருகின்றது.

தற்போது சமூக வலைத்தளங்களில் பரவிவரும் காணொளியில் காணப்படும் சில அடையாளங்கள் திருநாவுக்கரசின் பண்ணை வீட்டிலிருந்து பதிவு செய்யப்பட்டுள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

எனவே திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில்தான் பெண்கள் ஆபாசமாக படமெடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

குறித்த வீட்டிற்கு காவல் துறையினர் சென்று சோதனை நடத்தியுள்ளனர்.

பாலியல் வழக்கினால் திருநாவுக்கரசு குடும்பத்தினர் அவமானத்தை சந்தித்துள்ளனர்.

இதற்கு முன்னர் திருநாவுக்கரசின் தாயார் அக்கம் பக்கத்திலுள்ள மக்களுடன் சரளமாக பேசி பழகி வந்துள்ளார்.

ஆனால் தற்போது அவர்களுடன் குறித்த பகுதி மக்கள் யாரும் பழகுவதையோ பேசுவதையோ தவிர்த்துக்கொண்டுள்ளனர்.

பொது மக்களின் வெறுப்பினால் தனிமைப்படுத்தப்பட்ட திருநாவுக்கரசின் குடும்பத்தினர் வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

இந்த நிலையில் நான்கு நாட்கள் காவல் துறையின் தடுப்பு காவலுக்கான கால அவகாசம் நிறைவடைந்துள்ள நிலையில் திருநாவுக்கரசு மீண்டும் சிறை வைக்கப்பட்டுள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips