'கெவுமா' கைது செய்யப்பட்ட பின்னர் விசாரணைகளுக்கு பல்வேறு வழிகளில் அழுத்தம்!

Tuesday, 19 March 2019 - 13:49

%27%E0%AE%95%E0%AF%86%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%27+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%21
டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக்குழுத் தலைவர் மாகந்துரே மதூஷின் உதவியாளரான 'கெவுமா' கைது செய்யப்பட்ட பின்னர் பல்வேறு வழிகளில் விசாரணை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இம்மாதம் 05ம் திகதி பாணந்துறை - வாழைத்தோட்டம் பிரதேசத்தில் வைத்து கெவுமா என அழைக்கப்படும் கெலும் இந்திக 500 கோடி ரூபாய் பெறுமதியுடைய வைரக்கல்லுடன் கைது செய்யப்பட்டார்.

பின்னர் , காவற்துறையினர் தடுப்புக் காவலில் விசாரிக்க அனுமதியை பெற்று அவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் , சட்டத்தரணிகள் சிலர் பெஹலியகொடை காவல் நிலையத்தில் தங்கியிருந்து விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்துக்கொண்டதாக அதன் உயரதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

அதேபோல் , கெவுமாவின் தாயாரால் அவரை கைது செய்த பெஹலியகொடை குற்ற விசாரணைப்பிரிவின் அதிகாரிகள் இருவருக்கு எதிராக காவற்துறை மா அதிபர் நிவாரண மையம் மற்றும் பெஹலியகொடை காவற்துறையில் மூன்று முறைப்பாடுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தனது மகனை கொலை செய்ய சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறித்த மனுக்களில் குறிப்பிட்டுள்ளார்.

அதனூடாக , சந்தேகநபரிடம் இருந்து காவற்துறையினர் மேலதிக தகவல்களை பெறுவதை தடுப்பதற்கு எதிர்ப்பார்க்கப்படுவதாக காவற்துறை உயரதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காவற்துறை தடுப்பில் இருக்கும் போது சந்தேகநபரை பார்வையிட வந்த சட்டத்தரணிக்கு ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

கெவுமா கைது செய்யப்பட்ட பின்னர் அவர் தங்கியிருந்ததாக கூறப்படும் மொரடுவை - ராவதாவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து 177 கிலோ ஹெரோயின் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

அவை மாகந்துரே மதூஷுக்கு சொந்தமானது என பின்னர் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips