Hirunews Logo
%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%21
Tuesday, 19 March 2019 - 13:26
சூறாவளியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரமாக அதிகரிக்கக்கூடும் என அச்சம்!
9

Views
இடாய் சூறாவளியின் காரணமாக மொசாம்பிக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரமாக அதிகரிக்கக் கூடும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த நாட்டின் ஜனாதிபதி ஃபிலிப் நையூசி இதனைத் தெரிவித்துள்ளார்.

கடுமையான பாதிப்புகள் பதிவான இடங்களுக்கு அவர் நேற்று விஜயம் செய்திருந்தார்.

அங்குள்ள நதிகளில் இறந்தவர்களின் சடலங்கள் மிதப்பதை கண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் வியாழக்கிழமை இந்த சூறாவளி மணிக்கு 177 கிலோமீற்றர்கள் என்ற வேகத்தில் மொசாம்பிக்கில் தரைதொட்டது.

இதனால் பல இடங்களில் பெரும் சேதங்கள் பதிவாகியுள்ளன.

மீட்புப் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
12,077 Views
33,142 Views
5,468 Views
24,815 Views
821 Views
72,899 Views
Top