%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF+%E2%80%93+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+50+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Tuesday, 19 March 2019 - 20:39
மொசாம்பிக் சூறாவளி – வெள்ளத்தில் மூழ்கிய 50 கிலோமீற்றர் பரப்பு
543

Views
மொசாம்பிக்கில் ஏற்பட்ட சூறாவளியின் காரணமாக, சுமார் 50 கிலோமீற்றர் பரப்பு வெள்ளத்தில் மூழ்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த தினம் இடாய் என்ற சூறாவளி அங்கு கடுமையாக தாக்கியது.

இதன் பாதிப்பு சிம்பாப்வே மற்றும் மலாவியிலும் பதிவாகி இருந்தது.

மொசாம்பிக்கில் 1000 பேருக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அந்த நாட்டின் ஜனாதிபதி ஃபிலிப் நையூசி அச்சம் வெளியிட்டுள்ளார்.

இந்தநிலையில் சேவ் த சில்ட்ரன் அமைப்பு மேற்கொண்ட நில அளவையின்படி, சுமார் 50 கிலோமீற்றர் பரப்பு வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

புசி நதி கரைகளை உடைத்து வெள்ளநீரை பரப்பியுள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

அதேநேரம், புசி நகரம் எதிர்வரும் 24 மணி நேரத்துக்குள் வெள்ளத்தில் மூழ்கக்கூடும் என்றும் அங்கு சுமார் 2500 சிறார்களைக் கொண்ட குடும்பங்கள் வசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தினால் மொசாம்பிக்கில் சுமார் 6 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 1 லட்சம் பேருக்கு அவரச உதவி தேவைப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,858 Views
47,267 Views
3,824 Views
57,109 Views
8 Views
106,861 Views
Top