%27%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%27+%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E2%80%93+%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81
Wednesday, 20 March 2019 - 8:23
'பிரெக்ஸிட்' உடன்படிக்கை – இங்கிலாந்து சபாநாயகரின் அதிரடி முடிவு
428

Views
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 'பிரெக்ஸிட்' உடன்படிக்கை தொடர்பில் 3வது முறையாகவும் வாக்கெடுப்பு நடத்த அனுமதி அளிக்க முடியாது என சபாநாயகர் ஜோன் பெர்கோவ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் நேரத்தை வீண்விரையம் செய்வதை தடுக்கவும், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட முடிவுக்கு உரிய மரியாதை அளிக்கவும் இந்த நடவடிக்கையை எடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாட்டில் மாற்றம் வராத நிலையில் ஏற்கனவே 2 முறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் குறித்த பிரேரணை தோற்கடிக்கப்பட்ட நிலையிலும், ஆதரவை தெரிவிக்குமாறு கூறி மீண்டும் அவர்களை கோர முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சபாநாயகரின் இந்த தீர்மானம் பிரதமர் தெரசா மேவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தநிலையில், சபாநாயகரின் அறிவிப்பை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, உறுப்பினர்கள் சபையை கூட்டி பிரதமர் தெரசா மே அவசர ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'பிரெக்ஸிட்' உடன்படிக்கை தொடர்பில் இங்கிலாந்தின் நாடாளுமன்றில் கடந்த 2 முறைகள் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையிலும், அதிகூடிய வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,858 Views
47,267 Views
3,824 Views
57,109 Views
8 Views
106,861 Views
Top