Hirunews Logo
%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+-+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D
Thursday, 21 March 2019 - 20:31
இடாய் சூறாவளியால் பாரிய பாதிப்பு - மீட்பு பணிகளில் சிக்கல்
275

Views
இடாய் சூறாவளி காரணமாக பாரிய அளவில் பாதிப்புக்குள்ளான மொசாம்பிக் மக்களை மீட்பதில், மீட்பு பணியாளர்கள் தொடர்ந்தும் சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.

சூறாவளியை அடுத்து ஏற்பட்ட பாரிய வெள்ளம் காரணமாக மக்கள் மரங்களிலும் வீடுகளின் கூரைகளிலும் நிர்கதியாக இருப்பதாக தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மொசாம்பிக்கின் துறைமுக நகரான பீரா நகரத்தில் சுத்தமான குடிநீர் ஒரு சில நாட்களுக்கு மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொசம்பிக் மற்றும் சிம்பாப்பே நாடுகளில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 300 என உறுதிப்படுத்தப்பட்ட போதிலும் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதவிர சுத்தமான குடிநீர் மற்றும் போதிய உணவு அற்ற நிலையில், தொற்று நோய்கள் பரவுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக மருத்துவதரப்பினர் எச்சரித்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட இந்த சூறாவளி மணிக்கு 177 கிலோமீற்றர் வேகத்தில் சிம்பாவே மற்றும் மலாவியை தாக்கியமை குறிப்பிடத்தக்கது.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
11,821 Views
32,804 Views
3,544 Views
23,395 Views
26 Views
71,009 Views
Top