+6+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88...
Wednesday, 17 April 2019 - 13:01
6 பேரிடமும் தொடர்ந்தும் விசாரணை...
443

Views
டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் பொறுப்பேற்றகப்பட்ட, 6 பேரிடமும் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பாதாள உலக குழுவின் தலைவர் மாகந்துரே மதூஷூடன் டுபாயில் கைது செய்யப்பட்டவர்களில், 6 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

இதன்போது, அவர்களை இன்று அதிகாலை 4.45 அளவில் விமானநிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் பொறுப்பேற்றனர்.

கைது செய்யப்பட்டவர்களுள், மாகந்துரே மதூஷூடைய உறவுமுறை சகோதரர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் நிலான் ரொமேஸ் சமரசிங்க என அழைப்படுவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவருடன், மொஹமட் ரிசான் மொஹமட் பதுர்தீன், கயான் புத்திம பெரேரா, மொஹமட் ஜபீர், சுரேஸ் வசந்த ரணசிங்க மற்றும் சைமன் ஹேவகே ஆகியோர் நாடு கடத்தப்பட்ட குறித்த குழுவில் உள்ளடங்குகின்றனர்.

அவர்கள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஆரம்ப கட்ட விசாரணைகளின் பின்னர் தீர்மானிக்கப்படும் என, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்தி பிரிவிடம் தெரிவித்துள்ளார்.

மாகந்துரே மதூஷூடன் கைது செய்யப்பட்டவர்களுள் இதுவரையில், மொத்தம் 21 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,518 Views
46,823 Views
2,634 Views
56,158 Views
1,231 Views
105,882 Views
Top