Hirunews Logo
10+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D...%21%21
Wednesday, 17 April 2019 - 17:31
10 பேரின் உயிரை பறித்த கோர விபத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட செல்பி புகைப்படம்...!!
410

Views
மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு முன்னால் இன்று அதிகாலை பேருந்தும் சிற்றூர்ந்தும் நேருக்கு நேர் மோதி, இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 10 பேரும் 3 குடும்பங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பை சேர்ந்த அவர்கள், நுவரெலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விட்டு வீடு திரும்பிய போதே இந்த அனர்த்தத்திற்கு முகம்கொடுத்துள்ளனர்.

சம்பவத்தில், லிஸ்டர் எலெக்சென்டர் எனப்படும் 32 வயதுடைய நபர், அவருடைய 27 வயதுடைய மனைவி மற்றும் 4 வயதுடைய இரட்டை பெண் குழந்தைகள் உயிரிழந்தவர்களுள் உள்ளடங்குகின்றனர்.

அவர்களுடன் பிரின்ஸ் ஹெடிரக் என்ற 48 வயதுடைய நபர், அவருடைய மனைவி, மகள் மற்றும் மகன் ஆகியோரும் சம்பவத்தில் உயிரிழந்தனர்.

அவர்களின் மற்றுமொரு மகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், ஜோஷப் ரெலின்டன் என்ற 56 வயதுடைய நபர், அவருடைய மனைவி, ஆகியோரும் இறந்தவர்களுள் உள்ளடங்குகின்றனர் என காவற்துறை ஊடக பேச்சாளரும், காவற்துறை அத்தியகட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிற்றூர்ந்து மோதுண்ட பேருந்தில் பயணித்த 6 பேரும் காயமடைந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற வேளை, பேருந்து திருகோணமலையில் இருந்து தியதலாவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்ததுடன், சிற்றூர்ந்து பதுளையில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தனியார் பேருந்தானது, பயணிகள் தேனீர் அருந்துவதற்கான நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் பயணத்தை ஆரம்பித்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில், பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிற்றூர்ந்து சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக்கலக்கமே இந்த விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என்று காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

எவ்வாறாயினும் குறித்த விபத்திற்கு முன்னர் சுற்றுலா சென்று எடுக்கப்பட்ட செல்பி புகைப்படங்கள் எமது செய்தி பிரிவுக்கு கிடைக்கப் பெற்றது.

படங்கள் இணைப்பு...
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
11,821 Views
32,804 Views
3,544 Views
23,395 Views
26 Views
71,009 Views
Top