Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3++%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BE-1...
Wednesday, 17 April 2019 - 19:19
விண்வெளி செல்லவுள்ள இராவணா-1...
793

Views
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இலங்கையின் பொறியலாளர்களினால் நிர்மாணிக்கப்பட்ட இராவணா-1 செய்மதி நாளை அதிகாலை 2.16க்கு அமெரிகட்காவிலிருந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு கொண்டு செல்வதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளன.

அமெரிக்காவின் - வெர்ஜினியா பிராந்தியத்திலிருந்து நாசா விண்வெளி நிறுவனத்தின் ஏவூர்திப் பொறியின் மூலம், புவியிலிருந்து சுமார்  400 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

ஜப்பானின் கியூஷு பல்கலைக்ககத்தின் பர்டிஸ் என்ற விசேட திட்டத்தின்கீழ் தயாரிக்கப்பட்டுள்ள ஆயிரம் கனசென்றிமீற்றர் நீளமுடைய இராவணா - 1 செய்மதியானது, 1.1 கிலோ கிராம் நிறைகொண்டதாகும்.

ஆர்த்தர் சீ. க்ளாக் மையத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சனத் பனாவென்னவின் யோசனைக்கு அமைய, இதுபோன்றதொரு செய்மதி திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன், அதற்கு இராவணா- 1 என்றும்  பெயரிடப்பட்டுள்ளது.

இராவணனின் விண்வெளி தொழில்நுட்பத்தை உலகிற்கு எடுத்துக்கூறும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
இந்தச் செய்மதியானது, சர்வதேச விண்வெளி மையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதன் பின்னர், எதிர்வரும் மே அல்லது ஜுன் மாதமளவில் அது விண்ணில் நிலைநிறுத்தப்படவுள்ளது.

இந்தச் செய்மதி விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட பின்னர், நாளொன்றுக்கு 15 தடவைகள் பூமியை சுற்றி வலம்வரவுள்ளது.

இந்தச் செய்மதியின் வேகம் வினாடிக்கு 7.6 கிலோமீற்றராகும்.
 
குறித்த செய்மதி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதன் பின்னர், இலங்கையையும், அதனைச் சூழவுள்ள வலையத்தையும் நிழற்படம் எடுத்தல் உள்ளிட்ட 5 செயற்பாடுகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்மதியின் நிர்மாணப் பணிகளுக்கு பங்களிப்பு வழங்கிய ஆர்த்தர் சீ. க்ளாக் ஆய்வு மத்திய நிலையத்தின் பொறியியலாளர் துலானி சாமிகா அமெரிக்காவிலிருந்தவாறு எமது செய்திச் சேவைக்கு தகவல் வெளியிட்டார்.
 
 
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
11,821 Views
32,804 Views
3,544 Views
23,395 Views
26 Views
71,009 Views
Top