+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE..%3F
Wednesday, 17 April 2019 - 19:13
விபத்துகள் அதிகளவில் இடம்பெறுவதற்கு அதிக வெப்பம் காரணமா..?
548

Views
இரவு நேரங்களில் வாகன விபத்துகள் அதிகளவில் இடம்பெறுவதற்கு அதிக வெப்பம் காரணமா என சந்தேகம் தோன்றுவதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சாரதிக்கு நித்தரை கலக்கம் ஏற்பட்டமையே மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு முன்னால் இன்று அதிகாலை பேருந்தும் சிற்றூர்ந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானமைக்கு காரணம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
 
மஹியங்கனையின் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 10 பேரும் 3 குடும்பங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பை சேர்ந்த அவர்கள், நுவரெலியாவிற்கு சுற்றுலா  மேற்கொண்டு தமது சொந்த இடத்திற்கு திரும்பியபோதே இந்த அனர்த்தத்திற்கு முகம்கொடுத்துள்ளனர்.

சம்பவத்தில், லிஸ்டர் எலெக்சென்டர் எனப்படும் 32 வயதுடைய நபர், அவருடைய 27 வயதுடைய மனைவி மற்றும் 4 வயதுடைய இரட்டை பெண் குழந்தைகள் உயிரிழந்தவர்களுள் உள்ளடங்குகின்றனர்.

அவர்களுடன், பிரின்ஸ் ஹெடிரக் என்ற 48 வயதுடைய நபர், அவருடைய மனைவி, மகள் மற்றும் மகன் ஆகியோரும் சம்பவத்தில் உயிரிழந்தனர்.

அவர்களின் மற்றுமொரு மகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், ஜோஷப் ரெலின்டன் என்ற 56 வயதுடைய நபர், அவருடைய மனைவி, ஆகியோரும் இறந்தவர்களுள் உள்ளடங்குகின்றனர் என காவற்துறை ஊடக பேச்சாளரும், காவற்துறை அத்தியகட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிற்றூர்ந்து மோதுண்ட பேருந்தில் பயணித்த 6 பேரும் காயமடைந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
இதேவேளை, கடந்த 13ஆம் திகதி முதல் இன்று காலை 6 மணிவரை நாடுமுழுவதும் இடம்பெற்ற 31 வாகன விபத்துகளில் 42 பேர் பலியாகியுள்ளனர் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், நேற்றுக் காலை 6 மணிமுதல் இன்று காலை 6 மணிவரை நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 266 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், வீதி விதிமீறல்கள் தொடர்பில் 7, 134 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இதேநேரம், கடந்த 11ஆம் திகதி முதல் இன்று முற்பகல் வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 1,536 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
 
கொழும்பிலுள்ள காவல்துறை தலைமையகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது, காவல்துறை ஊடகப் பேச்சாளரான காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வீதி விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 42 ஆயிரத்து 114 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்யும் நடவடிக்கை எதிர்வரும் 20ஆம் திகதிவரை முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,812 Views
47,209 Views
3,666 Views
56,962 Views
1,424 Views
106,723 Views
Top