விசேட தொலைபேசி உரையாடலொன்றை மேற்கொண்ட மோடி..

Monday, 22 April 2019 - 19:48

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF..
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் விசேட தொலைபேசி உரையாடலொன்றை மேற்கொண்டார்.
 
இலங்கை முகம்கொடுத்துள்ள துன்பியல் சம்பவம் தொடர்பில் தனிப்பட்ட முறையிலும், இந்திய அரசாங்கத்தின் சார்பிலும் ஜனாதிபதியிடம் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தேவையான எந்தவொரு உதவியையும் இலங்கைக்கு வழங்க தாம் தயாராகவுள்ளதாகவும் இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் இந்திய அரசாங்கமும் மக்களும் இலங்கையின் சகோதர மக்களுடனும் அரசாங்கத்துடனும் கைகோர்த்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு தொடர்ந்தும் பலமாக முன்னெடுக்கப்படும் என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
 
 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips