மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று...

Tuesday, 23 April 2019 - 13:02

%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81...
இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று இடம்பெற்று வருகின்றது.

கேரளா, குஜராத், கோவா, அசாம், பீகார், சத்தீஷ்கார், கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களிலும், தத்ராநகர் ஹவேலி, டாமன் டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் உள்ள 116 தொகுதிகளில்  இந்த வாக்குப்பதிவு நடைபெறுகின்றது.

காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவு இன்று மாலை 5 மணி வரை இடம்பெறவுள்ளது.

தேர்தல்கள் இடம்பெறும் தொகுதிகளில் காவற்துறையினர் மற்றும் இராணுவத்தினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் தமது வாக்குகளை ஆர்வத்துடன் பதிவு செய்து வருவதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது வாக்கை அளிப்பதற்காக குஜராத் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips