ட்விட்டர் தளத்தின் இணை ஸ்தாபகருடன் கலந்துரையாடிய டொனால்ட் ட்ரம்ப்

Wednesday, 24 April 2019 - 13:37

%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D+
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ட்விட்டர் தளத்தின் இணை ஸ்தாபகர் ஜெக் டோசியை சந்தித்து உரையாடியுள்ளார்.

வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது, ட்விட்டர் சமூக வளைத்தளம் குறித்து ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள அமெரிக்க பொது தேர்தலின் போது, பொது மக்களின் கருத்துப் பதிவுகளை பாதுகாப்பது குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டதாக ட்விட்டரினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சந்திப்பின்போது தாம் பாரபட்சமாக நடத்தப்பட்டதாக டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.

வெள்ளை மாளிகையின் ஓவல் காரியாலயத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததொன்று என குறிப்பிடப்பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips