பர்தா அணிந்து சென்ற நபரால் வத்தளையில் பதற்றநிலை!

Wednesday, 24 April 2019 - 20:19

%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%21
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இந்நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் இதுவரை 359 பேர் உயிரிழந்துள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் தற்போது வரை 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி , வெடிப்பொருட்களுடன் கூடிய வாகனங்கள் சில கொழும்பினுள் நுழைந்துள்ளதாக கிடைக்கப்பெற்றுள்ள உளவுத்துறை தகவலுக்கு அமைய கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் பாதுகாப்பு தொடர்ந்தும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் , பர்தா அணிந்து பெண்ணொருவர் போல் வத்தளை பிரதேசத்தில் பயணித்துக்கொண்டிருந்த நபரொருவர் பிரதேசவாசிளால் பிடிக்கப்பட்ட நிலையில் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.

குறித்த சந்தேகநபர் வத்தளை காவற்துறையினரால் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் , குறித்த சந்தேகநபர் தொடர்பில் எமது செய்திச் சேவை வத்தளை காவற்துறைக்கு அழைப்பினை மேற்கொண்டு வினவியது.

இதன்போது , குறித்த சந்தேகநபரை பெஹலியகொடை காவற்துறையிடம் ஒப்படைத்ததாக வத்தளை காவல் நிலைய பொறுப்பதிகாரி எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்திருந்தார்.

பின்னர் , அது தொடர்பில் பெஹலியகொடை காவற்துறையிடம் மற்றும் காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகத்தில் வினவியிருந்த நிலையில் அந்த சந்தேகநபர் தொடர்பில் பெஹலியகொடை காவற்துறையினருக்கு அல்லது காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகத்துக்கு எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

எவ்வாறாயினும் , குறித்த பர்தா அணிந்திருந்த நபர் விடுவிக்கப்பட்டுள்ளதாக எமக்கு பின்னர் அறியக்கிடைத்தது. 
 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips