தற்போதைய அசாதாரண சூழ்நிலை விரைவில் தணிக்கப்படும் - பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர்

Thursday, 25 April 2019 - 8:40

%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D
நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலை எதிர்வரும் சில தினங்களில் முழுமையாக தணிக்கப்படும் என்று பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

குறித்த விடயங்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதற்கமைய, குறித்த நிலைமையை பாதுகாப்புத் தரப்பினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும்.

குறித்த தாக்குதல்களை மேற்கொண்ட குழுவின் தலைவரும், தற்கொலை செய்துகொண்டுள்ளார் என தாம் நம்புவதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலுடன் இரண்டு குழுக்கள் தொடர்புப்பட்டுள்ளன.

இருப்பினும், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் குறித்து இரண்டு குழுக்களும் பிளவடைந்துள்ளன.

இந்த நிலையில், குறித்த விடயத்தில் சர்வதேச தீவிரவாத குழுக்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து ஆராயப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தாக்குதலை மேற்கொண்டவர்கள், மத்திய மற்றும் உயர் வருமானத்தை கொண்டவர்களும், உயர் கற்கை நெறிகளையும் மேற்கொண்டவர்களாவர்.

அவர்களின் குடும்பங்கள் பொருளாதார ரீதியில் ஸ்திரத்தன்மை மிக்கது என்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தகவல் வெளியிட்டுள்ளார்.




Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips