பொது மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - காவல்துறை கோரிக்கை

Thursday, 25 April 2019 - 12:10

%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+
இன்றைய தினம் சந்தேகத்திற்கிடமான முறையில் இடப்பட்டிருந்த பொதி மற்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் என்பன தொடர்பில் பல பிரதேசங்களில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கட்டுநாயக்க விமானநிலைய, வெளிப்புற வாகன தரிப்பிடம் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மகிழூந்து ஒன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன் காரணமாக, விமானநிலைய நுழைவு வீதி மூடப்பட்ட நிலையில், பின்னர் மீண்டும் திறக்கப்பட்டதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, பூகொடை நீதவான் நீதிமன்றத்தின் பின்புறத்தில் உள்ள இடமொன்றில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து குறித்த பகுதியில், காவற்துறை அத்தியகட்சர்களின் தலைமையில் பரிசோதனைகளும் விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.

இன்று காலை 9.00 மணியளவில் இடம்பெற்ற இந்த வெடிப்பு சம்பவத்திற்கு, அடையாளம் தெரியாத சில தரப்பினரே காரணமாக இருக்கலாம் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த வெடிப்புச் சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, மாவனெல்ல நகரில் சந்தேகத்திற்கிடமான உந்துருளி ஒன்று இன்று காவற்துறையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அத்துடன், நிவிதிகல, கடுகஸ்தொட – ரணவக பிரதேசத்தில் சந்தேகத்திற்கு இடமான பொதி ஒன்று மீட்கப்பட்டதையடுத்து, அது சோதனைக்கு உட்படுத்தப்பட்;ட போது அதில், அச்சமடையக் கூடிய பொருட்கள் எவையும் இருக்கவில்லை என காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, குருநாகல் - பேருந்து நிலையத்திலும், கிடைக்கப்பட்ட தகவலை அடுத்து, சோதனை நடவடிக்கைகளை காவற்துறையினர் மேற்கொண்டனர்.

இதனிடையே, அம்பலன்தொடை – கொக்கல சந்தி அருகில் பேருந்து ஒன்றில், இன்று காலை உரிமையாளர் அற்ற நிலையில் போடப்பட்டிருந்த பொதி ஒன்றினால் பதற்றநிலை ஏற்பட்டது.

இதயைடுத்து காவற்துறையினர் குறித்த பேருந்தை சோதனைக்கு உட்படுத்தினர்.

இந்தநிலையில், குறித்த பொதியில் இருந்து மீட்கப்பட்ட பொருட்கள் காவற்துறையினரால் பரிசோதனைக் உட்படுத்தப்பட்டது.

இதேவேளை, எதிர்வரும் 29ம் திகதிக்கு முன்னர் பாடசாலை வளாகங்களில் முப்படையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அதுகுறித்து முப்படைகளின் பிரதானிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கிடைக்கப்படும் தகவல்களுக்கு அமைய வீதிகளை மறித்து மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளுக்காக பொது மக்கள் பதற்றமடைய தேவையில்லை என காவற்துறை ஊடக பேச்சாளரும் காவற்துறை அத்தியகட்சருமான ருவான் குணசேகர கோரியுள்ளார்.

அத்துடன், தேவையற்ற வதந்திகளையும் பரப்ப வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு மற்றும் புறநகர்களில் இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips