%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF.....+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88...%21
Thursday, 25 April 2019 - 12:39
அரச பேருந்தில் காணப்பட்ட மர்ம பொதி..... சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை...!
12,799

Views
அம்பலந்தோட்டை கொக்கல சந்தியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்றினை படையினர் சோதனை செய்துள்ளனர்.

இந்த சோதனை நடவடிக்கை சற்று முன்னர் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பேரூந்தில் காணப்பட்ட பொதி தொடர்பில் நடத்துனர் பயணிகளிடம் வினவியுள்ளார்.

எனினும் எவரும் உரிமை கோராத பட்சத்தில் காவல் துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது குறித்த பொதியில் கணினி உதிரிபாகங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த பொதியினை காவல் துறையினர் கையகப்படுத்தியதோடு நிலைமை வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,687 Views
47,024 Views
3,161 Views
56,579 Views
1,320 Views
106,305 Views
Top