இதுவரை வெளியிடப்பட்டுள்ள தேர்தல் முடிவுகள்...

Thursday, 23 May 2019 - 13:20

%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...
17வது இந்திய பொதுத் தேர்தலில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள முடிவுகளின் அடிப்படையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
 
இதுவரை வெளியிடப்பட்டுள்ள தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், மோடி தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எனினும், இந்திய தேர்தல் ஆணையகத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போதுவரை வெளியிடப்படவில்லை.

இந்தியாவின் 543 தொகுதிகளில் வேலூர் தவிர்ந்த 542 தொகுதிகளில் கடந்த மாதம் 11 ஆம் திகதி முதல் கடந்த 19ஆம் திகதிவரை 7 கட்டங்களாக பொதுத் தேர்தல் இடம்பெற்றது.

இந்தத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் இன்று இடம்பெறுகின்றன.

இந்த நிலையில், இதுவரை வெளியிடப்பட்டுள்ள தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 310 இற்கும் மேற்பட்ட ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
 
இதேநேரம், ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 106 அளவிலான ஆசனங்களைப் பெற்றுள்ளது.
 
இந்தியாவில் ஆட்சியைக் கைப்பற்ற ஒரு கட்சியோ அல்லது கூட்டணியோ 272 ஆசனங்களைக் கைப்பற்ற வேண்டும்.
 
கடந்த 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் 282 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்த மோடி தலைமையிலான கூட்டணி, இம்முறை 310 இற்கும் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

இதேநேரம், கடந்த முறை 44 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்த காங்கிரஸ் கூட்டணி, இம்முறை 100 இற்கும் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

உத்தர் பிரதேசம் - வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, ஒரு இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

குஜராத் மாநிலம் காந்தி நகரில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரான அமித் ஷா ஒரு இலட்சத்து 20 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

இதேநேரம், அமேதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஸ்மிருதி ராணி ஆகியோருக்கு இடையே கடுமையான போட்டி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகுதியில் ராகுல் காந்தி பின்னடவை சந்தித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், வயநாட் தொகுதியில் மோடி முன்னிலையில் உள்ளார்.

இதேவேளை, தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி 37 ஆசனங்களையும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பாரதி ஜனதா கட்சி கூட்டணி 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் எந்தவொரு ஆசனத்தையும் கைப்பற்றவில்லை என இதுவரை வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips