Hirunews Logo
+%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
Friday, 14 June 2019 - 12:59
எஸ்.பி.திஸாநாயக்க காவற்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவில்
1,556

Views
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க காவற்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அவரால், நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட முறைப்பாடு ஒன்று தொடர்பாக அவர் இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.

றிசாட் பதியுதீன், அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோருக்கு எதிரான முறைப்பாடுகளை பதிவு செய்வதற்காக, சிரேஷ்ட காவற்துறை அதிகாரிகள் மூவர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது.

இந்த குழுவில் 27 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிராக எஸ்.பி.திஸாநாயக்கவும் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருப்பதுடன, அதில் 40 குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

அவற்றில் நிதிமோசடி குற்றச்சாட்டுகள் 20ம், அடிப்படைவாதிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டுகள் ஒன்பதும் அடங்குகின்றன.

இவை தொடர்பாக காவற்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவு விசாரணைகளை நடத்துகின்ற நிலையில், இன்றையதினம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்கவும் அழைக்கப்பட்டிருந்தார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
16,102 Views
38,296 Views
1,711 Views
38,555 Views
10 Views
88,323 Views
Top