%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3+%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
Friday, 14 June 2019 - 13:20
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் கண்டன அறிக்கை
127

Views
ஊடகவியலாளர்களை அச்சுறுத்தல் மற்றும் ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் உள்ளுராட்சி சபைகளுக்கு கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரு சில உள்ளூராட்சி மன்றங்களினால் ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும், பொதுமக்களது தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை மறுக்கப்பட்டுவருவதாகவும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்ப்பட்டுள்ளது.

வாழைச்சேனை - கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளரால் அந்த பிரதேசத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் கைலாயப்பிள்ளை உருத்திரன் கடந்த வாரத்தில் அச்சுறுத்தப்பட்டார்,

அதேபோன்று ஓட்டமாவடி - கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையால் மாதாந்த சபை அமர்வுகளில் சுயாதீனமாக ஊடகவியலாளர்களுக்கு செய்தி சேகரிப்புப் பணியினை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வரி செலுத்தும் மக்கள் தமது பிரதிநிதிகளினால் உள்ளூராட்சி மன்றங்களில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்படாமை போன்ற முழு ஜனநாயகத்துக்கு விரோதமான செயற்பாடுகள் இடம்பெறுகின்றமை கவலையளிக்கின்றது.

அரசியல்வாதிகள் விடுகின்ற பிழைகளைச் சுட்டிக்காட்டுகின்ற ஊடக நிறுவனங்களையும், ஊடகவியலாளர்களையும் தவறாகச் சித்தரிப்பதற்கும் புறக்கணிப்பதற்கும் சிலர் இவ்வாறான நடவடிக்கைகளில் புரிகின்றனர்.

இதன் மூலம் ஜனநாயகத்தின் குரல் நசுக்கப்படும் நிலை உருவாவதுடன், மக்கள் சரியான தகவல்களை அறிந்து கொள்வதில் பாரிய சிக்கல்கள் உருவாகும் என அந்த அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,518 Views
46,823 Views
2,634 Views
56,158 Views
1,231 Views
105,882 Views
Top