%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F++%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
Friday, 14 June 2019 - 15:59
எந்த சந்தர்ப்பத்திலும் கலந்துரையாட தயார்
516

Views
எந்தவொரு பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி ஆவா குழுவுடன் கலந்துடையாடுவதற்கு தான் தயாராக உள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

கொக்குவில் தொடருந்து நிலைய அதிபர் மீதான தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தாக்குதலானது, வட மாகாணத்தை மையப்படுத்தி ஆயுத வன்முறையிலும் பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளிலும் ஈடுபட்டுவரும் ஆவா குழுவினரால் நடாத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
 
இந்த நிலையில், குறித்த குழுவினரின் பிரச்சினை தொடர்பாக ஜனநாயக ரீதியிலான கலந்துரையாடலை அவர்களுடன் மேற்கொள்ள தான் தயாராக இருப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்திலும், வடமாகாணத்திலும் சட்டவிரோதமாக செயற்பட்டுவரும் சமூக விரோத குழுக்களை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் காவற்துறையிடம் கோரியுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட புதிய காவற்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ வடமாகாண ஆளுநரை இன்று ஆளுநரின் செயலகத்தில் வைத்து சந்தித்தார்.

இதன்போது ஆளுநர் இந்த கோரிக்கையை முன்வைத்தார் என  ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
 
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,518 Views
46,823 Views
2,634 Views
56,158 Views
1,231 Views
105,882 Views
Top