Hirunews Logo
%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D+-++5+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
Friday, 14 June 2019 - 16:15
மோதல் சம்பவம் - 5 பேர் விளக்கமறியலில்
10,176

Views
ஹட்டன் - டிக்கோயா - தரவளை மைதானத்தில் இடம்பெற்ற கிரிக்கட்  சுற்றுப் போட்டியின் போது இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 11 பேரில், 5 பேர் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 
கடந்த 9 ஆம் திகதி குறித்த மோதல் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
 
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏனைய 6 பேரும் சிறுவர்கள் என்பதனால், அவர்களை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில்  எதிர்வரும் 27 ஆம் திகதி வரை வைக்குமாறும் ஹட்டன் நீதவான் ஜயராமன் டொர்க்சி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
கிரிக்கெட் சுற்றுப் போட்டியின்போது இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
அதில் காயமடைந்த 3 பேரில் ஒருவர் கண்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருவதோடு, மேலும் 2 பேர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சம்பவம் தொடர்பில், குறித்த பகுதியில் உள்ள சீ.சீ.ரி.வி காணொளி ஊடாக மேலதிக விசாரணைகளை ஹட்டன் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
16,102 Views
38,296 Views
1,711 Views
38,555 Views
10 Views
88,323 Views
Top