Hirunews Logo
%E0%AE%A4%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D++%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF
Friday, 14 June 2019 - 16:18
தஜிகிஸ்தான் ஜனாதிபதியை சந்தித்த மைத்திரி
395

Views
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் உலகின் அனைத்து நாடுகளுடனும் நெருங்கிய நட்புறவை பேணுவது தமது நோக்கமாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தஜிகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அந்த நாட்டு ஜனாதிபதி எமொமாலி ரஹ்மொனுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
 
பொருளாதார அபிவிருத்தி, சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளும் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் முறையான திட்டமொன்றின் ஊடாக இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்தும் இரண்டு நாடுகளினதும் தலைவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

அத்துடன், இரண்டு நாடுகளுக்கிடையில் முதலீட்டு மற்றும் வியாபார வாய்ப்புகளை கண்டறியும் துரித நிகழ்ச்சித்திட்டமொன்று குறித்து அவர்கள் கவனம் செலுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேநேரம், பிராந்திய பாதுகாப்பு தொடர்பிலும் போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பது தொடர்பிலும் ஒத்துழைப்புடன் செயற்படுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
16,102 Views
38,296 Views
1,711 Views
38,555 Views
10 Views
88,323 Views
Top