%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88..
Friday, 14 June 2019 - 19:02
உயர் கல்வி அமைச்சின் அனுமதி கிடைக்கப்பெறவில்லை..
1,050

Views
மட்டக்களப்பு புனானி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்திற்கு, உயர் கல்வி அமைச்சின் அனுமதி கிடைக்கப்பெறவில்லை என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

2015 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று முன்னிலையானபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - புனானி பகுதியில் நிர்மாணிக்கப்படும் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில், ஹிஸ்புல்லாஹ்விடம் சுமார் மூன்றரை மணிநேரம் ஆணைக்குழு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்துள்ள கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், தங்களது பல்கலைக்கழகம் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

அங்கு எந்தவொரு கற்கை நெறியும் கற்பிக்கப்படவில்லை என்பதுடன், எந்தவொரு மாணவரும் உள்ளீர்க்கப்படவில்லை.

பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க வேண்டுமானால், உயர்கல்வி அமைச்சின் அனுமதி அவசியமாகும்.

இதற்கமைய, குறித்து நிறுவனத்திற்கும், அதில் கற்பிக்கப்படவுள்ள கற்கைநெறிகளுக்கும் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தியதாக ஹிஸ்புல்லாஹ் கூறியுள்ளார்.
 
 
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,518 Views
46,823 Views
2,634 Views
56,158 Views
1,231 Views
105,882 Views
Top