Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF...
Friday, 14 June 2019 - 20:11
நரேந்திர மோடி அதிருப்தி...
760

Views
பயங்கரவாதத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் நாடுகள் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
 
ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பினால், கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த மாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உட்பட ஏனைய பல நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

அதில் தொடர்ந்தும் உரையாற்றிய மோடி, பயங்கரவாதமற்ற நாடாக இந்தியாவை மாற்றுவதில் தாம் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 
ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக செயல்படுவதற்கு தங்களது உறுதிப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.

அத்துடன், பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்கு உலகநாடுகளின் தலைவர்கள் அனைவரும் இணைந்து விசேட மாநாடொன்றை நடத்த வேண்டியதன் அவசியம் குறித்து மோடி வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, புனித அந்தோனியார் தேவலயத்தில் பயங்கரவாதிகள் மேற்கொண்டிருந்த தாக்குதலினால் பலியானவர்களின் உறவினர்களை சந்தித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு முன்னதாக சீன தலைவர் சீ ஜின்பிங்கை சந்தித்து உரையாடிய இந்தியப் பிரதமர் மோடி, பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியுள்ளார்.
 
இதேவேளை, குறித்த மாநாட்டில் உரையாற்றிய, பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான், பிராந்தியத்தில் நிரந்தர சமாதானம் நிலவுவதற்கு  சம்பந்தப்பட்ட நாடுகள் வர்த்தகம், உட்கட்டமைப்பு என்பனவற்றில் இணைந்து செயல்பட வேண்டும் என வலயுறுத்தியுள்ளார்.
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
16,102 Views
38,296 Views
1,711 Views
38,555 Views
10 Views
88,323 Views
Top