பாடப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்...?

Friday, 21 June 2019 - 20:54

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D...%3F
இஸ்லாமிய மார்க்கத்தை துறப்பவர், கொலை செய்யப்பட வேண்டும் என கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள பாடப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் நேற்று சாட்சியமளித்தபோது, பொதுமகனான ரிஸ்வின் இஸ்மத் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இதன்போது சாட்சியம் வழங்கிய அவர், தான் பிறப்பால் முஸ்லிம் என்றபோதும், 2013 ஆம் ஆண்டளவில் மதத்திலிருந்து விலகியதாகவும், தற்போது மதத்தை பின்பற்றாத ஒருவர் என்றும் தெரிவித்துள்ளார்.

தனது வாழ்நாளில் தான் நீண்டகாலம் பினபற்றிய சமயம் என்றபடியினாலும், அது சரி என்று நம்பிக்கைகொண்டு, பல விடயங்களை அர்ப்பணித்திருந்தமையினால், ஏனையவர்களுக்கும்  இது குறித்து அறிந்துகொள்ள வேண்டும் என்பதனால் தனது பேஸ்புக் ஊடாக இஸ்லாம் சமயம் தொடர்பில் கேள்விகளை எழுப்பியிருந்ததாகவும் ரிஸ்வின் இஸ்மத் கூறியுள்ளார்.

இஸ்லாம் சமயத்தை துறந்தவுடன், கொலை செய்யப்பட வேண்டும் என்பது சமயத்தில் உள்ளது.

அதுமட்டுமன்றி, அது இந்த நாட்டின் கல்வி அமைச்சினால் மாணவர்களுக்கு வழங்கப்படும் பாடப் புத்தகத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய புத்தகத்திலும் அது வேறு முறைமையில் குறிப்பிடப்பட்டுள்ளாதாக ரிஸ்வின் இஸ்மத் தெரிவித்துள்ளார்.

சமயத்தை துறந்த ஒருவரை கொலை செய்ய வேண்டும் என்பது 1981 இல் வெளியிடப்பட்ட 9ஆம் மற்றும் 10 ஆம் தரங்களுக்கான இஸ்லாம் பாடப்புத்தகத்தின் 80, 81, 84, 85, 86, 88, 90, 91 மற்றும் 92 ஆம் பக்கங்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு புத்தகங்களில், அவர், முஸ்லிம் சமூகததின் துரோகியாக கருதப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி, புதிய புத்தகத்தில் தமிழ் மொழியில் குறிப்பிடப்பட்டுள்ள சொற்பதமானது, மரண தண்டனை என்றில்லாமல் படுகொலை என்ற சொற்பதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இவ்வாறான விடயங்கள் பாடசாலை பாடப்புத்தகங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும்போது, சஹ்ரான் போன்றோர் உருவாக சிரியாவிலிருந்து எவரும் வரவேண்டும் என்ற அவசியமில்லை என ரிஸ்வின் இஸ்மத் தெரிவித்துள்ளார்.
 
 
 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips