30+%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+...
Sunday, 14 July 2019 - 13:08
30 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும் ...
794

Views
மாகாண சபைத் தேர்தல் ஆகக் குறைந்தது எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து எமது செய்திச் சேவை வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதன் காரணமாக, ஜனாதிபதி தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை முன்னதாக நடத்துவதனால் ஜனாதிபதித் தேர்தல் எந்தவொரு காரணத்திற்காகவும் பிற்போகாது.

சட்டரீதியான தடங்கல்களின் காரணமாக மாகாண சபைத் தேர்தல் காலம் தாழ்த்தப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், மாகாண சபைத் தேர்தல் அரசியலமைப்பின் ஒழுங்குவிதிகளுக்கு அமைய இடம்பெறவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டாலும், நடத்தப்படாவிட்டாலும் ஜனாதிபதித் தேர்தலை காலம்தாழ்த்த தேர்தல்கள் ஆணைக்குழு ஒருபோதும் இடமளிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் திட்டமிட்டவாறு, எவ்வித தடைகளும் இன்றி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு முன்னிற்பதாக அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் மிக நெருங்கிய தினமாக செப்டம்பர் 20 ஆம் திகதியாகும்.

இந்த நிலையில், ஒக்டோபர் 10ஆம் திகதிக்கும் 15 ஆம் திகதிக்கும் முன்னதாக குறித்த தேர்தலை நடத்திமுடிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், தேர்தலை முன்கூட்டிய தினத்திற்கு கொண்டுசெல்வதாயின், செப்டம்பர் மாதம் நிறைவடைவதற்கு முன்னதாக இதனை நிறைவுசெய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்ட இரண்டு மாதங்களுக்கு பின்னர் பொதுத் தேர்தலை நடத்த தீர்மானித்துள்ளதாக கடந்த மாதம் 26 ஆம் திகதி இடம்பெற்ற ஊடக அமைப்புக்களின் தலைவர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதேநேரம் ஜனாதிபதி தேர்தலை எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு இணங்கியுள்ளதாக இந்தியாவில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,568 Views
46,887 Views
2,808 Views
56,296 Views
1,267 Views
106,024 Views
Top