%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81..
Sunday, 14 July 2019 - 13:10
கட்சியில் இடமளிக்கப்படமாட்டாது..
788

Views
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் வெவ்வேறு பெயர்கள் கூறப்பட்டாலும், கட்சியில் அவற்றுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கதிர்காமத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரிய, சரத் பொன்சேகா போன்ற பிரபலமானவர்களே கட்சியில் உள்ளனர்.

இந்த நிலையில், வெவ்வேறு பெயர்கள் கூறப்பட்டாலும், ஐக்கிய தேசியக் கட்சியில் அவற்றுக்கு இடமளிக்கப்படமாட்டாது.

அனைவரும் இணைந்து, நாட்டை நேசிக்கும், எதிர்காலம் குறித்து தொலைநோக்கு பார்வையுடையவரையே முன்னிறுத்துவோம்.

இவ்வாறான நிலையில், கிராமத்திலிருக்கும், மதகு மற்றும் கால்வாய்கள் தொடர்பில் கருத்து தெரிவித்து நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல முடியாது என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,568 Views
46,887 Views
2,808 Views
56,296 Views
1,267 Views
106,024 Views
Top