+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D..
Sunday, 14 July 2019 - 13:01
மதுபான அனுமதிப்பத்திரம் விநியோகம்..
685

Views
கடந்த 2018ஆம் ஆண்டு 74 புதிய மதுபான அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
 
2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, இது நூற்றுக்கு 64 வீத அதிகரிப்பாகும்.
 
2014 இல் 83 புதிய மதுபான அனுமதிப் பத்திரங்களும், 2015இல் 52 அனுமதிப்பத்திரங்களும், 2016இல் 38 அனுமதிப் பத்திரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன.
 
இந்த நிலையில், 2017 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 10 ஆக குறைவடைந்துள்ளது.
 
எவ்வாறிருப்பினும், கடந்த ஆண்டு புதிய மதுபான அனுமதிப் பத்திர விநியோகம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
 
நாடாளுமன்றத்தல் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட மதுவரித் திணைக்களத்தின் 2018ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் எமது செய்திச் சேவை, மதுவரித் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரான, மதுவரித் திணைக்கள பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்கவிடம் வினவியது.
 
இதன்போது பதிலளித்த அவர், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையின் அனுமதியுடன், சிற்றுண்டிச்சாலைகள், விருந்தகங்கள் முதலானவற்றுக்கு புதிதாக மதுபான அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
17,678 Views
40,556 Views
1,146 Views
43,692 Views
956 Views
93,464 Views
Top