%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3+%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%87+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81++
Sunday, 14 July 2019 - 14:07
மரண தண்டனையை தடுத்தால் அன்றைய தினமே தேசிய துக்க தினம் - ஜனாதிபதி அதிரடி கருத்து
1,640

Views
மரண தண்டனையை நீக்கும் சட்டத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்தால் அது போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் பாதாள உலகத்தினருக்கும் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்றவர்களுக்கும் நாட்டை ஒப்படைப்பதாக அமையும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவத்துள்ளார்.

அப்படி சந்தர்ப்பம் ஏற்பட்டால் அந்த தினத்தை நாட்டின் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்துவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஐயாயிரம் மகாவலி குடியேற்றவாசிகளுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு இன்று முற்பகல் வளவை வலயத்தின் வதிவிட வியாபார முகாமைத்துவ அலுவலகத்தின் விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மரண தண்டனையை நீக்குவதற்கு அரசாங்கத்தின் சிலரினது தேவையின் பேரில் நாடாளுமன்றத்திற்கு சட்டமொன்றை கொண்டு வருவதற்கு முயற்சிப்பதன் மூலம் வெற்றியடைவது நாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களும் குற்றவாளிகளுமேயாகும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் இந்த நாட்டின் இளம் தலைமுறையினரது எதிர்காலத்தை சீரழிப்பதற்கு தான் இடமளிக்க போவதில்லையென ஜனாதிபதி குறிப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதுடன், மரண தண்டனை வழங்குவதற்காக எடுக்கப்பட்ட தீர்மானத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அழுத்தங்களின் காரணமாகவே மரண தண்டனை வழங்குவது தொடர்பான தீர்மானத்திற்கு சிலர் எதிர்ப்புத் தெரிவிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எனவே மரண தண்டனை நாட்டுக்கு அவசியமாகும் என்பதை நாட்டையும் இளந் தலைமுறையினரையும் நேசிக்கின்றவர்கள் மத்தியில் விரிவான மக்கள் ஆதரவை கட்டியெழுப்ப வேண்டுமென குறிப்பிட்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த நோக்கத்திற்காக ஒன்றிணையுமாறு தான் அனைவருக்கும் அழைப்புவிடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,456 Views
46,692 Views
2,312 Views
55,887 Views
1,194 Views
105,605 Views
Top