+%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D..
Sunday, 14 July 2019 - 13:22
ஈரானுடனான அணு ஒப்பந்தத்தை கைவிடுவதற்கு காரணம்..
63

Views
நாடுகளுக்கு இடையேயான இராஜதந்திர தகவல்கள் கசிவடைந்தமையே ஈரானுடனான அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா கைவிடுவதற்கு முக்கிய காரணம் என 'சண்டே மெயில்' செய்தி வெளியிட்டுள்ளது.
 
பிரித்தானியாவிற்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் கிம் டரோ, அமெரிக்க அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்த கடிதம் கசிவடைந்ததனை அடுத்தே அமெரிக்கா ஈரானுடனான அணு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இரகசிய தன்மையை கொண்ட செய்தி வெளியானமையானது, 'இராஜதந்திர தன்மையான பயங்கரவாதம்' என பிரித்தானிய தூதுவர் முன்னர் விமர்சித்திருந்தார்.
 
ஈரானுடனான அணு ஒப்பந்தத்தை உறுதியாக முன்னெடுக்கும்படி அப்போதைய வெளிவிவகார இராஜாங்க செயலர் பொரிஸ் ஜொன்சன் 2018 ஆம் ஆண்டு வேண்டுகோள் விடுத்திருந்த நிலையிலேயே இரகசிய குறிப்பாணை செய்தி வெளியாகியிருந்தது.
 
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையேயான அணு ஒப்பந்தம் அமுலில் இருந்த காலப்பகுதியினில், அணு தொடர்பான சில செயல்பாடுகளை ஈரான் மட்டுப்படுத்துவதற்கு தமது இணக்கத்தை வெளிப்படுத்தியிருந்தது.
 
எப்படியிருப்பினும், இரகசியத் தன்மை வெளிப்பட்ட நிலையில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் இருந்து டொனால்ட் ட்ரம்ப் அதிக ஈடுபாட்டை காட்ட தவறியுள்ளதாக  'சண்டே மெயில்' செய்தி வெளியிட்டுள்ளது.
 
குறித்த விடயம் இந்த அளவு பாரதூரமான நிலைக்கு இட்டு செல்லும் என டொனால்ட் ட்ரம்ப் கருதவில்லை எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,568 Views
46,887 Views
2,808 Views
56,296 Views
1,267 Views
106,024 Views
Top