%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
Sunday, 14 July 2019 - 15:47
காவல்துறைக்கு பொய்யான தகவலை வழங்கிய நபர் கைது
696

Views
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக காவற்துறை அவசர தொலைபேசி இலக்கத்திற்கு போலி தகவலை வழங்கிய ஒருவர் எல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

காவற்துறை விஷேட விசாரணை பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அந்த திட்டம் புறக்கோட்டை பகுதியில் உள்ள இஸ்லாமிய வழிப்பாட்டு தலம் ஒன்றில் 8 பேரால் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கடந்த 12 ஆம் திகதி தகவல் வழங்கியிருந்தார்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய அந்த தகவல் போலியானது என கண்டறியப்பட்டது.

இதன்பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய போலி தகவலை வழங்கியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,568 Views
46,887 Views
2,808 Views
56,296 Views
1,267 Views
106,024 Views
Top