செயலி ஒன்றின் மூலம் வரும் ஆபத்து தகவல் தொழில்நுட்ப சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

Thursday, 18 July 2019 - 9:36

%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA+%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
இந்த நாட்களில் பேஸ்புக் சமூக வலைதலத்தில் பேஸ்எப் என்ற செயலி பிரபலமாகியுள்ளது.

எனினும் இதனைப் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது என்று தகவல் தொழில்நுட்ப சங்கம் கூறுகிறது.

அதன் தலைவர் ராஜீவ் யசிரு குருவிட்ட வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்த செயலியை பயன்படுத்துவதால் பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தரவு திருடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பேஸ்எப் செயலியை பயன்படுத்தும் பயனர்களது அனுமதி இன்றி அவர்களின் திறன்பேசிகளில் உள்ள படங்களை செயலியால் அணுகமுடியும்.

அதேநேரம், இந்த செயலியை உருவாக்கியவர்கள், அதனை பயன்படுத்த வேண்டாம் என்று ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த தகவல் தொழில்நுட்ப சங்கத் தலைவர் ராஜீவ் யசிரு குருவிட்ட, பேஸ்புக் பயனர்கள் தங்கள் தனியுரிமையைப் பாதுகாக்க இணையத்தை அவதானமாக பயன்படுத்துமாறு கோரியுள்ளார்.



.






Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips