பொது மக்களுக்கான முக்கிய அறிவித்தல்

Thursday, 18 July 2019 - 20:18

%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

களுகங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் பல பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் பிரதிப் கொடிப்பிலி இதனை தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி, எலபாத மற்றும் கிரியெல்ல மற்றும் அயகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக அந்த பகுதிகளில் தாழ் நில பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, தெற்கு, தென்மேற்கு, மேல் மாகாணத்திலிருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக அருகில் உள்ள கடற்றொழில் துறைமுகத்திற்கு திரும்பி வருமாறு கடற்படை அறிவுறித்தியுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips