%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E2%80%93+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
Friday, 19 July 2019 - 19:57
காபூல் பல்கலைக்கழகத்திற்கு அருகில் குண்டு வெடிப்பு – எட்டு பேர் உடல் சிதறி பலி
65

Views
ஆப்கானிஸ்தான் காபூல் பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் எட்டு பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

இது தவிர, பரீட்சை ஒன்றை எழுதுவதற்கு தாயாரான நிலையில் இருந்த 33 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

18 வருடங்களாக அங்கு இடம்பெற்று வரும் மோதல்களை முடிவிற்கு கொண்டு வரும் நோக்கில் அமெரிக்கா சமாதான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

தமது சமாதான முயற்சிகள் படிப்படியாக முன்னெற்றத்தை காட்டுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ள போதிலும், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு தரப்பினர் நளாந்தம் தலிபான்களின் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர்.

இந்த நிலையில், இன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் குறித்து எந்த ஆயுத குழுவும் இதுவரை உரிமை கோரவில்லை.

இந்த சம்பவம் இடம்பெற்ற ஒரு சில மணி நேரத்திற்கு பின்னர் ஆயுததாரிகள் கந்தகார் நகரத்தில் உள்ள காவல்துறை தலைமையகத்திற்கு முன்னால் மேற்கொண்ட இரண்டு கார் குண்டு தாக்குதலில் குறைந்தது 12 பேர் பலியானதுடன், 80இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
18,841 Views
42,938 Views
937 Views
48,217 Views
119 Views
97,537 Views
Top