%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+300+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
Friday, 19 July 2019 - 21:39
காஷ்மீரில் 300 பேர் கொல்லப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு
57

Views
இந்த வருடத்தின் முதல் ஆறு மாத காலப்பகுதியினுள் 300 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் காஷ்மீர் பிராந்தியத்தில் கொல்லப்பட்டுள்ளதாக இந்தியாவும், பாகிஸ்தானும் பரஸ்பரம் குற்றம்சுமத்தியுள்ளன.

காஷ்மீர் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே இரண்டு யுத்தங்கள் இடம்பெற்றுள்ளன.

மூன்றாவது யுத்தமும் நடைபெறும் என அச்சம் வெளியிடப்பட்ட நிலையில், இறுதி நேரத்தில் அது தவிர்க்கப்பட்டது.

பாகிஸ்தானில் நிலைகொண்டுள்ள ஆயுத குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 40 இந்திய இராணுவ துணைப்படையினர் கொல்லப்பட்டனர்.

ஜுலை மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்ட இரு அறிக்கைகளுக்கு அமைய பாடசாலை அதிபர் ஒருவரும் 12 வயதான சிறுவர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

பாடசாலை அதிபர் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மரணமாகியுள்ளார்.

சிறுவர், ஆயுத குழுவினால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

முதல் ஆறு மாத காலப்பகுதியினுள் இந்திய தரப்பினரால் காஷ்மீர் பிரதேசத்தில், ஆயுத குழுக்களை அழிக்கும் நோக்கில் 177 சுற்றி வளைப்புக்களை மேற்கொண்டனர்.

ஜம்மு காஷ்மீர் சிவில் சமூகத்தின் கூட்டணி என்ற மனித உரிமை அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் காலத்திற்கு காலம் இந்த அமைப்பு காஷ்மீர் பிராந்தியத்தில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து அறிக்கை வெளியிட்டு வருகின்றது.

இதற்கமைய, இந்த வருடம் முதல் ஆறு மாத காலப்பகுதியினிலேயே அதிக அளவிலான பாரதூரமான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
விலை உயர்ந்த மிதி வண்டிகள்..
Wednesday, 13 November 2019 - 9:23
உலகின் அழகிய மற்றும் விலை உயர்ந்த 10 மிதி வண்டிகளின் புகைப்படங்கள்          Read More
News Image
Hiru News Programme Segments
22,925 Views
48,796 Views
1,546 Views
60,655 Views
468 Views
110,407 Views
Top