%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
Saturday, 20 July 2019 - 8:08
கடுமையான விளைவுகள் ஏற்படும்
1,936

Views
சட்டவிரோதமான முறையில் ஸ்திரத்தன்மைக்கு பங்கம் ஏற்படும் வகையில் ஈரான் அபாயகரமான பதையில் பயணிப்பதாக பிருத்தானிய வெளிவிவகாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

பிருத்தானிய கொடியுடன் பயணித்த மெஸ்டா என்ற எண்ணெய் தாங்கி கப்பலை கைப்பற்றிய சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட கப்பலின் நிறுவனம், கப்பலுடன் தொடர்பு கொண்ட முயற்சி பலன் அளிக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது அந்த கப்பல் ஹோமூஸ் நீரிணை பகுதியில் ஈரானிய படகுகள் நான்கு மற்றும் உலங்குவாநூர்தி ஆகியனவற்றின் துணையுடன் ஈரானிய கடற்பரப்பினுள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் நடவடிக்கைகள் சர்வதேச சட்ட திட்டங்களை முற்றாக பாதிக்கும் விடயம் என தெரிவித்துள்ள பிருத்தானிய அரசாங்கம் அதனால் ஏற்படும் பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என எச்சரித்துள்ளது.

அதேவேளை, இந்த கப்பலில் பணியாற்றும் இந்திய, ரஷ்ய, லற்றிவினிய மற்றும் பிலிப்பீன்ஸ் நாடுகளை சேர்ந்த 23 பேருக்கும் எந்த விதமான காயங்களும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிருத்தானியாவை சேர்ந்த சரக்கு கப்பல்களை ஈரானிய கடற்பிராந்தியத்தை தவிர்க்கும் படி பிருத்தானிய அரசு ஆலோசனை வழங்கியுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
18,841 Views
42,938 Views
937 Views
48,217 Views
119 Views
97,537 Views
Top